சிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.