உயர்தர மாணவனை பலியெடுத்த அரச பேருந்து - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 29, 2020

உயர்தர மாணவனை பலியெடுத்த அரச பேருந்து

வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் நேற்று மாலை இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் அகப்பட்டு நசியுண்டு ஓமந்தை மத்தியகல்லூரி உயர்தர மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த விளக்குவைத்தகுளம் பகுதியை சேர்ந்த பானுஜன் வயது19 என்ற மாணவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிவிட்டு வீடு சென்ற குறித்த மாணவன், மீண்டும் ஓமந்தைப் பகுதிக்கு சென்ற சமயம் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக தெரியவருகையில் யாழில் இருந்து வவுனியா நோக்கிசென்ற பேருந்து ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருடன் மோதியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்