பாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்டுரம்ப என்ற இடத்தில் வைத்து குறித்த அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
தரம் 07 இல் கல்வி கற்கும் 11 மாணவிகளை இவர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் பாடசாலைக்கு சென்ற பொலிஸார் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அறிக்கைகளைப்பெற்ற பின்னர் அதிபரை கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றையதினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.