யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 29, 2020

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று  இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

“யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.