எல்பிடிய-அலுத்கம பிரதான வீதியின் படுவத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்பிடியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் உந்துருளி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாக மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த 40 வயதுடைய நபரொருவரே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.