நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள இரு வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையா்கள் 31 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் என்பவற்றினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த திங்களன்று இடம்பெற்றுள்ளது.
நல்லுாா் ஆலயத்தின் முன்பாகவுள்ள வீடொன்றிலேயே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடா்பாக வீட்டின் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளாா்.
இதேபோல் நல்லூர் செட்டித்தெருவில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் நுழைந்த கொள்ளையா்கள் 5 பவுண் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை நல்லூர ஆலய சுற்றாடலில் தொடா்ச்சியாக இவ்வாறு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடப்படும் சம்பவங்கள் அதிகாித்துள்ளமை மக்கள் மத்தியில் பீதியை தோற்றுவித்துள்ளது.