சுவரோவியம் வரைந்தவர்களை மோதித் தப்பிய இராணுவ வாகனம்: மயிரிழையில் தப்பிய இளைஞர்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 3, 2020

சுவரோவியம் வரைந்தவர்களை மோதித் தப்பிய இராணுவ வாகனம்: மயிரிழையில் தப்பிய இளைஞர்கள்சுவரோவியம் வரையும் இளைஞர்களை மோதிய சிறிலங்கா இராணுவ வாகனம் தரித்து நிற்காது தப்பிச் சென்றுள்ளது. சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலைய சுவரில் பசுமை நிழல்கள் அமைப்பின் இளைஞர்கள் நேற்றிரவு சுவரோவியம் வரைந்து கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்று சேதப்படுத்தி தப்பி சென்றுள்ளது. இதன் போது அதிஸ்டவசமாக இளைஞர்கள் தப்பியுள்ளனர். ஆயினும் பயன்படுத்திய பொருட்கள் சேதமாகியுள்ளன.