கூட்டமைப்பின் இணக்கப்பாடு? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 3, 2020

கூட்டமைப்பின் இணக்கப்பாடு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான சிங்கள நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதன்போதே இதுகுறித்த இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, யாழ்.மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 7, புளொட் 2, ரெலோ 1 வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 4, புளொட் 2, ரெலோ 3 வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

தென் தமிழீழம் , மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 5, புளொட் 1, ரெலோ 2 வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

அத்துடன், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மூன்று கட்சிகளிடமும் வேட்பாளர் பற்றாக்குறை நிலவுவதனால் அங்கு கட்சிகள் தங்களிடமுள்ள வேட்பாளர்களை பரிந்துரைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.