நான் கூறிய பரிசை ஜனாதிபதி அறிவித்துள்ளார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 15, 2020

நான் கூறிய பரிசை ஜனாதிபதி அறிவித்துள்ளார்பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு ஒன்று கிடைக்கும் என கூறி வந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்போவதாக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (15) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையிலான இந்த அரசாங்கத்தில் சொல்வதையே செய்வோம், செய்வதையே சொல்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த கால அரசாங்கத்தில் பின் தள்ளப்பட்டு வந்த தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பில் புதிய அரசாங்கம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு அமைய பொங்கல் தினமான இன்று தோட்ட தொழிலாளர்கள் சந்தோஷப்படும் விதத்தில் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு நிச்சயம் வழங்கப்படும் என்ற பொங்கல் பரிசினை தெரிவித்துள்ளார். - என்றார்