ஊடகவியலாளரின் வீட்டிற்குள் சிவில் உடையில் இரவில் நுழைந்த பொலிசார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, January 2, 2020

ஊடகவியலாளரின் வீட்டிற்குள் சிவில் உடையில் இரவில் நுழைந்த பொலிசார்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செ.நிலாந்தனின் வீட்டிற்கு அவரை கைது செய்ய இரவில் சென்ற பொலிசார் அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று(02) இரவு 9.10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தனின் செங்கலடி ரமேஸ்புரம் வீட்டிற்கு சிவில் உடையில் சென்ற ஏறாவூர் பொலிஸார் அவரை கைது செய்து கொண்டுபோக முயற்சித்துள்ளனர்.

ஊடகவியலாளர் வீட்டில் இல்லாததையடுத்து, பொலிசார் தம்மை அச்சுறுத்தி விட்டு சென்றதாக குடும்பத்தினர் குற்றம்சுமத்திள்ளனர்.

அத்துடன், ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தனை நாளை காலை 9 மணிக்கு ஏறாவூர் பொலிசிற்கு வருமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

இரவு வேளையில் சிவில் உடையில் பொலிசார் சென்றதால் ஊடகவியலாளரின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதேவேளை ஊடகவியலாளர் நிலாந்தனை பொலிசார் ஏன் கைது செய்ய முயற்சி செய்கின்றனர் என்பது குறித்து எந்த தகவலையும் குடும்பத்தினரிடம் பொலிசார் கூற மறுத்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.