புது வருட தினத்தில் தமிழ் அரசியல் கைதியொருவர் சிறைச்சாலைக்குள்ளேயே உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆயுள்த்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று (1) அவர் உயிரிழந்தார். 27 வருடங்களை அவர் சிறைக்குள் கழித்திருந்தார்.
தென்தமிழீழம், மட்டக்களப்பை சேர்ந்த செ.மகேந்திரன் (46) என்பவரே உயிரிழந்தார்.
1993ம் ஆண்டு தனது 19வது வயதில் கைது செய்யப்பட்ட அவர் சுகவீனம் காரணமாக 46 வயதில் நேற்று உயிரிழந்தார். சிறிதுகாலமாக சுகவீனமுற்றிருந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
மட்டக்களப்பில் 600 சிறிலங்கா பொலிசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்திருந்தது.