நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வரத்தடையில்லையென பிரதமர் மகிந்தவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் சந்திப்பின் பின்னராக ரஜினி இலங்கை தரவிரும்பியதாகவும் ஆனாலும் அவருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் பரவியிருந்தன.
இதனையே மறுதலித்துள்ள நாமல் தானும் தனது தந்தையும் கூட ரஜினி ரசிகர்கள் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதிதாக வெளிவந்த ரஜினியின் தர்பார் படத்தை திரையரங்கு சென்று மகிந்த ராபக்ஸ பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.