டுபாயில் வீட்டு உரிமையாளரான 60 வயது மூதாட்டியை காதலித்து கைவரிசை: இலங்கை இளைஞன் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 1, 2020

டுபாயில் வீட்டு உரிமையாளரான 60 வயது மூதாட்டியை காதலித்து கைவரிசை: இலங்கை இளைஞன் கைது!

டுபாயில் பணிபுரிய சென்ற இலங்கை இளைஞன், வீட்டு உரிமையாளரான 60 வயது பெண்மணியை காதல் வலையில் வீழ்த்தி, பெருந்தொகை நகைகளை சுருட்டிக் கொண்டு இலங்கை தப்பி வந்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்ப பகுதியை சேர்ந்த 30 வயதான திருமணமாகாத இளைஞன் ஒருவர் டுபாய்க்கு பணிபுரிய சென்றுள்ளார். அங்கு, வீட்டு உரிமையாளரான 60 வயது மூதாட்டியுடன் காதல் வயப்பட்டுள்ளார். அந்த மூதாட்டி ஏற்கனவே திருமணமானவர்.

இருவரும் நெருங்கிப்பழகியுள்ளனர். மூதாட்டிக்கு தெரியாமல் அவரது மூன்றரைக் கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்களை திருடிக் கொண்டு, இளைஞன் இலங்கை திரும்பியுள்ளார்.

இது தொடர்பான முறைப்பா, இலங்கைத் தூதரகம் ஊடாக செய்யப்பட்டதையடுத்து, இளைஞனை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.