‘காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்?’: போராடும் உறவுகளிடம் கேட்ட தமிழ்ப்பெண்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 1, 2020

‘காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்?’: போராடும் உறவுகளிடம் கேட்ட தமிழ்ப்பெண்!

உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப் பெண்ணொருவர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் (30) கிளிநொச்சியில் நடத்திய போராட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது.
கரைச்சி பிரதேசசபைக்கு முன்பாக உள்ள காணி தொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது. அந்த காணி தமக்குரியது என பிரதேசசபை குறிப்பிட்டுள்ளது. எனினும், அது தம்முடைய காணியென தனிநபர் ஒருவர் உரிமை கோரி, வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியிருந்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பேரணியாக வந்து, குறிப்பிட்ட இடத்தில் சில தினங்கள் பந்தல் அமைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அந்த இடத்தில் போராட்டக்காரர்கள் சென்றபோது, காணி உரிமையாளரான அந்தப் பெண், அந்த பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன்போதே, உங்கள் பிள்ளைகளை முதலைக்கு போட்டு விட்டார்கள். இனி வரப் போகிறார்களா? எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என எகத்தாளமாக கேட்டார்கள்
இதனால் கோபமடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அவரை சூழ்ந்து கொண்டு கொந்தளிக்க, அந்த இடத்திலிருந்து ஓடித்தப்பினார்.