தொலைபேசி கலந்துரையாடல்கள் அடங்கிய 5 இறுவெட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு பாதகமான இறுவெட்டுக்களை இன்று மாலை 6 மணிக்கு முன்னதாகக் கையளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையிலேயே அவர் இவற்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
இன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்!
நாடாளுமன்றில் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக தன்னிடம் இருக்கும் பல குரல் பதிவுகளை சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரச தலைவர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், அமைச்சர்களின் குடும்ப உறவுகள் என அனைவரின் குரல் பதிவுகளும் உள்ளன என ரஞ்சன் ராமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
அத்தோடு அவற்றினை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதாகவும் குரல் பதிவுகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் அவற்றினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு காஞ்சனா விஜயசேகர தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இந்த குரல்பதிவுகள் அடங்கிய இறுவெட்டு மற்றும் வன் தட்டு ஒரு குறிப்பிட்ட வங்கியில் பாதுகாப்பு லொக்கரில் இருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.