5 நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில்: பிரபல பாலிவுட் நடிகை, மாடல் அழகி கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, January 10, 2020

5 நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில்: பிரபல பாலிவுட் நடிகை, மாடல் அழகி கைது!

மும்பை 5 நட்சத்திர விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக எழுந்த புகார்களை அடுத்து போலீஸார் ரெய்டு நடத்தினர். இதில் விபச்சார கும்பல் பிடிபட்டது. இந்த ரெய்டில் பாலிவுட் நடிகை மற்றும் பெண் மாடல் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மும்பை புறநகர் பகுதியாஅ கோரேகானில் இந்த 5 நட்சத்திர விடுடி உள்ளது, புகார்களை அடுத்து டிசிபி டி.எஸ். ஸ்வாமி விடுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டார்.

இதில், “பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா (32), மாடல் அழகி ரிச்சா சிங் (26) ஆகியோர் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்” என்றார் டிசிபி ஸ்வாமி. மேலும் இரண்டு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதிக்கு வாடிக்கையாளர்கள் போல் சிலரை முதலில் அனுப்பி பொறி வைத்தனர். இவர்கள் நடிகை அம்ரித தனோவா மற்றும் ரிச்சா சிங் ஆகியோரை சந்தித்து அளவளாவிய போது போலீஸ் குழு உள்ளே நுழைந்து கையும் களவுமாகப் பிடித்தனர்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370(3), மற்றும் 34-ன் கீழ் ஒழுக்க மீறல் ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.