நல்லூர் கந்தனின் குபேராலய தீப உற்சவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 10, 2019

நல்லூர் கந்தனின் குபேராலய தீப உற்சவம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் குமாராலய தீப உற்சவம் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து வள்ளி, தெய்வயானை சமேதராக முருகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி வந்தார்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 05.30 மணியளவில் முருகப் பெருமான் வெளிவீதியை நோக்கி எழுந்தருளினார்.

கைலாச வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பாகப் பாரியளவில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு ஆலய பிரதம சிவாச்சாரியாரால் தீபமேற்றப்பட்டது.

இந்தத் தீபவொளி பாரியளவில் ஒளிவீசிப் பிரகாசித்தது.

சொக்கப்பனை எரிவுற்று முடிவுற்றதைத் தொடர்ந்து அக்கினியில் சங்கமமான சொக்கப்பனையின் எஞ்சிய பாகங்களை எடுத்துச் சென்றதுடன் நெற்றியில் வைத்தும் பூசித்தனர்

தொடர்ந்து வள்ளி,தெய்வயானை சமேத முருகப் பெருமான் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கைலாச வாகனத்தில் அலங்கார நாயகனாக வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முருகப் பெருமான் வீதி வலம் வந்த போது அடியவர்கள் முருக நாம பஜனை பாடித் துதி செய்தனர்.

இதில் நாடெங்கிலும் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.