இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக (New Director Real Estate & Quartering) நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, முன்னதாக ரணவிரு சம்பத் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.