வவுனியா வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் கைதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் சார்பில் 3 சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகி சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு தெரிவித்திருந்தனர். இதற்கு சிங்கள காவல்த்துறை மறுப்பு தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்த நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.