பிள்ளையான் விடுதலைக்கு பிறகு தமிழர்கள் கொள்ளப்படலாம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 22, 2019

பிள்ளையான் விடுதலைக்கு பிறகு தமிழர்கள் கொள்ளப்படலாம்?

கூட்டமைப்பிற்கு மாற்றீடாக வடக்கில் புதிய கட்சி ஒன்றை தோற்றுவிக்க ஒட்டுக்குழு கருணா மும்முரமாகியுள்ளார்.

இதற்கேதுவாக காணாமல் ஆக்கப்பட்டோரை கொன்று புதைக்கும் பணிக்கு பொறுப்பாக இரந்த  ஒட்டுக்குழு    பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை ஒன்றை  கருணா  விடுத்துள்ளார்.

இதனிடையே முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி சகிதம் தனது கட்டமைப்பினை ஆரம்பித்துள்ள கருணா ஏற்கனவே தனது புதிய கட்சி கூட்டில் வியாழேந்திரன் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் அடுத்த கட்டமாக டெலோ சார்பு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனை உள்ளே கொண்டுவரும் முயற்சியில் தான் மும்முரமாகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.