ஏன் பொலிசாருக்கு ரோஜாப் பூ கொடுத்தேன்?: மாணவி விளக்கம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 20, 2019

ஏன் பொலிசாருக்கு ரோஜாப் பூ கொடுத்தேன்?: மாணவி விளக்கம்!

டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஷ்ரேயா பிரியம் ராய் (21), ஜந்தர் மந்தரில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புகளை அடக்க நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் படையைச் சேர்ந்த ஒரு போலீஸுக்கு அமைதியின் குறியீடாக ரோஜாப்பூவை அளித்தது இணையத்தளத்தில்பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

வரலாறை பாடமாக எடுத்து எம்.ஏ. பட்டப்படிப்பு படித்து வரும் ஷ்ரேயா பிரியம் ராய், “நான் சமூகச் செயல்பாட்டாளர் அல்ல, நான் வழக்கமான ஒரு மாணவி, கலைத்துறையில் கால்பதிக்க விரும்புகிறேன், இந்த மாதிரி வைரலானதை விரும்பவில்லை’.

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஜே.என்.யு., டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அப்போது கலவரத்தை அடக்க வந்த போலீஸாரிடமே சென்று ரோஜாப்பூவை அளித்ததை நிருபர் ஒருவர் புகைப்படம் எடுக்க அது பல முறை பகிரப்பட்டது,

அமைதியை வலியுறுத்தும் செய்கையாக இந்த ரோஜாப்பூவை அளித்ததாக அவர் தெரிவித்தார். தான் தனிப்பட்ட முறையிலேயே ஜந்தர் மந்தருக்கு வந்ததாகவும் தான் எந்த குழுவைச் சேர்ந்தவரும் அல்ல என்று கூறிய ஷ்ரேயா பிரியம் ராய், ‘மாணவர்கள் வன்முறையாளர்கள் அல்ல, அரசின் கொள்கைகளை அமைதிவழியில் எதிர்த்தார்கள் அவ்வளவே” என்றார்.

தன்னையும் வன்முறையாளர் என்று கருதி போலீஸார் அடித்தால் போலீஸாருக்கு அளிக்க ரோஜாப்பூக்களை வாங்கினேன் என்று ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார் ஷ்ரேயா பிரியம் ராய்.