சம்பிக்க ரணவக்கவை சிறையில் சந்தித்தார் ரணில் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 20, 2019

சம்பிக்க ரணவக்கவை சிறையில் சந்தித்தார் ரணில்கைதுசெய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க, சம்பிக்க ரணவக்கவை பார்வையிட்டதுடன், சுமார் 30 நிமிட பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஆசு மாரசிங்க ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.