திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதூர், சம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம், இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டைப்பறிச்சான் தெற்கு, இறால்குழி, மகிழ்ச்சேனை பகுதிகளைச் சேர்ந்த இந்த நால்வரும் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து இரண்டு உந்துருளிகளும் மீட்கப்பட்டன.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, ரி-56 துப்பாக்கி ஒன்று, மகசின்கள் இரண்டு, ரவைகள் 61, கிளைமோர் ஒன்று, கைக்குண்டுகள் மூன்று, டெட்டனேற்றர்கள் மூன்று, 9 மி.மீ ரவைகள் 3 1 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் நால்வரும், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்