சிலி நாட்டு இராணுவ விமானமொன்று 17 விமான ஊழியர்கள் உட்பட 38 பேருடன் காணாமல் போயுள்ளது.
அந்தாட்டிக்கா நோக்கிப் பயணித்த வழியிலேயே இது காணாமல் போயுள்ளதாக சிலி விமானப்படை அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.
காணாமற்போன விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிலி நாட்டு விமானப்படை அறிவித்துள்ளது.