றோயல் பார்க் கொலைக்குற்றவாளி நாட்டை விட்டு மாயமா ~பரபரப்பு தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 10, 2019

றோயல் பார்க் கொலைக்குற்றவாளி நாட்டை விட்டு மாயமா ~பரபரப்பு தகவல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது மன்னிப்பு வழங்கிய றோயல் பார்க் கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷிரமந்த ஜயமஹா ஏற்கனவே நாட்டில் இருந்து வெளியேறி விட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜூட் ஷிரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது ஆஜராகிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் ஜூட் ஷிரமந்த ஜயமஹாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடையை அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூட் ஷிரமந்த ஜயமஹாவுக்கு வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது