சஜித் கொழும்பில் களமிறங்க ரணில் பச்சைக்கொடி! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, December 26, 2019

சஜித் கொழும்பில் களமிறங்க ரணில் பச்சைக்கொடி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதம வேட்பாளர் என்ற ரீதியில் நாடு முழுவதும் பயணிக்க வேண்டியுள்ளதால், எந்த சிரமமும் இல்லாமல் வெற்றிப்பெறக்கூடிய ஒரு மாவட்டத்தில் போட்டியிட சஜித்துக்கு வாய்ப்பளிப்பது தவறல்ல என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.


எவ்வாறாயினும், தான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக இருந்தால், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்படும் வேட்பாளர் வெற்றிடத்துக்கு தான் பெயரிடும் ஒருவரே போட்டியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேதமாச தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.