சாய்ந்தமருது நகர சபை இலக்கு மெய்ப்பட வேண்டுமாயின் ஜனாதிபதி கோட்டாபய கரங்கள் பலம் பெற வேண்டும் என வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது நகர சபை இலக்கை நோக்கிய மக்கள் பணிமனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ். வை.எம். ஹனீபா தனது கருத்தில் கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடக்கம் இன்றுவரை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் பற்றி உரையாற்றினார்.
இதனை அடுத்து மக்களின் கனவுகள் மெய்ப்பட வேண்டுமாயின் ஜனாதிபதியின் கரங்கள் அவசியம் பலம் பெறுதல் வேண்டும் என்றும், அதற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு அறுதி பெரும்பான்மையை பெற்று கொடுக்க அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.