யாழில் வயலில் கஞ்சா மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, December 26, 2019

யாழில் வயலில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், நாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள வயலில் இருந்து 6 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யாழ். விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா பொதியின் நிறை 6 கிலோ 540 கிராம் எனவும் இதன் பெறுமதி 1 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.