நாளை வெளியாகவுள்ளது உயர்தர பரீட்சை முடிவுகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, December 26, 2019

நாளை வெளியாகவுள்ளது உயர்தர பரீட்சை முடிவுகள்

கடந்த ஓகஸ்ட மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை நள்ளிரவுக்கு முன் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 உயர்தரப் பரீட்சையில் இந்த ஆண்டு 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். 


 அவர்களில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 475 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 229 பேர் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.