கருணா விவகாரத்தில் நால்வர் திடீர் கைது! அதிர்ச்சியில் புலனாய்வு துறை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 31, 2019

கருணா விவகாரத்தில் நால்வர் திடீர் கைது! அதிர்ச்சியில் புலனாய்வு துறை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வலதுகரமாகவும், கிழக்கு மாகாண கட்டளை தளபதியாகவும் இருந்த கருணா அம்மன் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர்களில் இருவர் முன்னாள் புலிகள் என்பதுடன் அவர்களிடமிருந்து ரி56 ரக ஆயுதம் ஒன்றும் பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து இயங்கும் கும்பல் ஒன்றினால், அந்த குழு இயக்கப்படுவது ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் கையளிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நால்வரின் கைதும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த சம்பவம் பாதுகாப்பு தரப்பினருக்கு குழப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.