யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்து கொண்டவர் மருத்துவரின் மனைவி என்றும், கைதடியில் இயங்கும் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றியவர் என்றும் தெரியவருகிறது.
குறித்த பெண்ணுக்கும் மருத்துவருக்கும் அண்மையில் திருமணம் நடந்ததாக குறிப்பிடப்படுகிறது. எனினும் தற்கொலைக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.