கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தங்கியிருந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்நிலையில் பிரசாத் நிர்வாகம் முதலில் ஆடியோ செக்ஷன் என்கிற டிபார்ட்மெண்டையே சுத்தமாக முடிவிட முடிவெடுத்தது. இந்த செக்ஷனில் இளையராஜாவிடம் பணியாற்றிய ஐந்து ஊழியர்களும் இருக்கிறார்கள். ராஜா தினமும் ஸ்டூடியோவிற்கு வந்தவுடன் அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதுதான் இவர்களின் வேலை. ஆடியோ செக்ஷனை மூடிவிட்டவுடன் அதில் பணியாற்றியவர்களையும் வேலையை விட்டு நிறுத்தியது நிர்வாகம் இதில் இந்த ஐந்து பேரும் விலக வேண்டியதாகி விட்டது.
இதனால் ராஜாவுக்கு காலையில் தனக்கு வேண்டியதை செய்ய ஆள் இல்லாமல் சிரமப்பட்டார். அப்போதே பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ராஜாவுக்கு க்ரீன் சிகனல் காட்டியிருக்கிறது. ஆனால் சினிமா புரடக்ஷன் ஆட்களை வைத்தே தன் பணிகளை தொடர்ந்தார். தொடர்ந்து ராஜாவுக்கு நெருக்கமான சில நிர்வாகிகளையும் மாற்றியது. புதிதாக ஹைதராபாத்திலிருந்து தெலுங்கு ஆட்கள் பொறுப்பை ஏறறுக்கொண்டார்கள். இதனால் ஸ்டூடியோவில் தனக்கு எது வேண்டும் என்று யாரிடமும் ராஜா கேட்க முடியாமல் போனது. இதன் பிறகுதான் ராஜா தரப்பில் போலீஸ் வரை போகவேண்டியதாகி விட்டது.
இந்த விஷயத்தில் பாரதிராஜா தலையிட்டதும் பிரசாத் நிர்வாகம் உஷாரானது. சென்னையில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து முன் கூட்டியே தங்கள் தரப்பு முடிவை அவர்களுக்கு சொல்லி அனுப்பியது. இப்போது சினிமாவில் இருக்கும் அமைப்புகளில் இருக்கும் தலைவர்களுக்கும் செய்தியை அனுப்பி வைத்தது. இதனால் பாரதிராஜா போராட்டம் நடத்தியபோது திரண்டு வந்திருக்க வேண்டிய திரையுலகம் கள்ளமௌனம் சாதித்து தள்ளி நின்று விட்டனர். இப்படி இவர்கள் மௌனசாமியார்களாக மாறியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த அமைப்புகளில் இருப்பவர்கள் எல்லோருமே தெலுங்கு பேசுபவர்கள். ஒருவர்கூட தமிழர்கள் இல்லை என்பதுதான் ஆச்சரியம்.
இதனால்தான் ராஜா விஷயத்தில் பட்டும் படாமலும் நடந்து கொண்டிருக்கிறார்கள். நம் தமிழர் பெருமையை தனது இசை மூலமும், சிம்பொனி அமைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்ததும் நம்மை தலை நிமிர வைத்த இளையராஜாவுக்கு எதிராக தமிழ்நாட்டிலிருந்தே ஒரு கூட்டம் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறது என்பதும் அதற்கு சிலர் துணை போவதும் வேதனையை கொடுக்கிறது.