ஞானசாரருக்கு நல்ல சிந்தனை வந்திருக்கின்றது? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, December 12, 2019

ஞானசாரருக்கு நல்ல சிந்தனை வந்திருக்கின்றது?

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது என்பது, ஒரு கண் துடைப்புச் செயலாகும் .இதனைக்  காலத்தை இழுத்தடிக்கின்ற செயலாகவே கருதுவதாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.



“அரசியல் கைதிகளை, அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்ய வேண்டும் என்பது தான், எங்களது கோரிக்கையாக இருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை இதுவரைக்கும் தெற்கின் பெரும்பாலான சிங்களச் சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழ்நிலையிலேயே, தற்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்” என ஞானசார தேரர் கூறியுள்ளார் .

மேலும், அவர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கு, ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை, ஞானசார தேரருக்கு வந்தது வரவேற்கத்தக்க விடயமாகும் என்றும் இந்தச் சிந்தனை, தெற்கு சமூகத்தினருக்கும் வரவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், ஆணைக்குழுக்களை நியமிப்பது ஒரு கண்துடைப்புச் செயலாகும். கடந்த காலங்களில், எத்தனையோ ஆணைக்குழுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள், எந்த அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படவில்லை. இது காலத்தை ,ழுத்தடிக்கின்ற ஒரு செயலாகவே நாங்கள் கருதுகின்றோம்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அரசியல் கைதிகள் அனைவரையும் அரசியல் தீர்மானத்தினூடாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, ஞானசார தேரர், அவரைச் சார்ந்த அமைப்பினர், அதுபோன்று தெற்கின் சிங்கள சமூகம் முன்வைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது” எனவும் ; அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.