வடக்கில் நல்லெண்ணம் பற்றி பேசும் வடக்கின் முன்னாள் ஆளுநர் தென்னிலங்கையில் தர்ம அடி வாங்கி தப்பித்துள்ளார்.
பாணந்துறை பகுதியில் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கலந்து கொண்ட பொது கூட்டம் ஒன்றுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் பொழுது அவர்மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
ரெஜினோல்ட் கூரேக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அவர் செல்லும் பாதையை தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபொழுது அவருடன் கூட பயணித்த ஆதரவானவர்களுக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்பொழுது கூரே மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பின்னர் பொலிஸார் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகச்செய்தார்கள்