சிறிசேனவுக்கு எம்பி பதவியா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 14, 2019

சிறிசேனவுக்கு எம்பி பதவியா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சில தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பௌசியின் நாடாளுமன்ற உறுப்பிரிமையை நீக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கயை எதிர்வரும் சில தினங்களில் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.