கோத்தபாயவின் வெள்ளை வான் கடத்தலை அம்பலப்படுத்திய இருவர் கைதாகியுள்ளனர்.இராணுவ புலனாய்வு பிரிவிற்கு நெருங்கிய உறவை கொண்டவர்களென அடையாளப்படுத்தப்பட்ட இருவரே கைதாகியுள்ளனர்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் ருத்து தெரிவித்திருந்த குறித்த இருவரையுமேட குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் மேற்குறித்த இருவரும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.