தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுத் தலைமைத்துவமொன்று வருவதை அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,
தமிழ் மக்கள் நீண்டகாலமாக மாற்றுத் தலைமை தேவை என்பதை உறுதியாக கூறி வந்துள்ளார்கள். அந்த மாற்றுத்தலைமைக்கான தேவை இன்று நேற்று அல்ல, இவர்கள் எப்போது தவறு விட தொடங்கினார்களோ அப்போதே அவர்களை மக்கள் விசர்சனத்துக்கு உள்ளாக்கினார்கள்.
இருப்பினும் கூட குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு திருந்துவதாக இல்லை. மாறாக மாற்று அரசியல் தலைமையொன்று உருவாக கூடாது என்பதில் மாத்திரமே அக்கறையாக உள்ளனர்.
அதாவது மாற்று அரசியல் தலைமைகளினால் வெற்றியடைய முடியாது என்றும் மாற்று அரசியல் வந்தால் 2/3 பெரும்பான்மையை புதிய அரசாங்கத்துக்கு கொண்டு வந்தால் எல்லாமே மோசமடைந்து விடும் என்றும் பேசுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் எங்களது வாக்குகள் இல்லாமல் வெற்றியடைய முடியாது என்றனர். ஆனால் கோட்டாபாய சிங்கள மக்களுடைய வாக்குகளினால் மாத்திரம் ஜனாதிபதியாகியுள்ளார் - என்றார்.