விபத்து வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பட்டலி சம்பிக ரணவக்காவுக்கு இன்று (24) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
கொழும்பு மேலதிக நீதிவான் நெரஞ்சனா டி சில்வா, குற்றம் சாட்டப்பட்டவர்களை 25,000 காசுப்பிணையிலும், 500,000 ரூபா பெறுமதியான இரண்டு ஆட் பிணையிலும் விடுவிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை பதிவு செய்ய சம்பிக்க ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொழும்பு குற்றப்பிரிவு (சிசிடி) முன் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.