கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
கனடாவின் மேற்கு திசையில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் கரையோரத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹார்டிக்கின் மேற்கே 175 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்துக்கு முன்பாக அதே பகுதிக்கு அருகில் ரிக்டர் அளவில் 5.7 மற்றும் 5.2 அளவிலான இரண்டு நிலநடுக்கம் அடுத்தடுத்து பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.