சஜித்துக்கு அருகில் கதிரையை இழந்தார் ரணில் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 24, 2019

சஜித்துக்கு அருகில் கதிரையை இழந்தார் ரணில்

எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியதும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவராக, சபநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்படவுள்ளார்.


சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனவரி மாதம் 03ஆம் திகதி சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது, எதிர்க்கட்சித்தலைவர் ஆசனத்தை சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனவரி மாதம் 03ஆம் திகதிக்கு முன்னதாக, சபை முதல்வர் மற்றும் ஆளும் தரப்பின் பிரதம கொரடா ஆகிய பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் தமக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித்துக்கு அருகில்,பாராளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்கப்படாது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கும் வரிசைக்கு அடுத்த வரிசையிலேயே ரணிலுக்கு ஆசனம் ஒதுக்கப்படும் என பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன