ராஜித பிணையில் விடுதலை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 29, 2019

ராஜித பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

வெள்ளை வான் விவகாரம் – ராஜித நீதிமன்றில் முன்னிலை

நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அதற்கமைய அவர் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலை அல்லது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியும் என சிறைச்சாலை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

இதற்கமைய அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்காக சிறைச்சாலை நோயாளர் காவு வண்டி ஒன்று நேற்று நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலைக்குச் சென்றது.

எனினும் அந்த வைத்தியசாலையின் வைத்தியர்களின் அனுமதி கிடைக்காதமையினால், நான்கு மணிநேரத்திற்கு பின்னர் அங்கு காத்திருந்த நோயாளர் காவு வண்டியுடன் அதிகாரிகளும் வெளியேறினரென்பது குறிப்பிடத்தக்கது.