நாட்டை துண்டாக பிரிக்க முயற்சித்த பிரபாகரனின் கூட எமது தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கவில்லை என நாராஹென்பிடிய அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என எடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.
நாட்டை இரண்டாகப் பிரிக்க முயற்சித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் கூட எமது தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை.
இத்தகைய நிலைமையில் நல்லாட்சி அரசாங்கம் செய்த தூர நோக்கற்ற செயலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு சுமந்திரன் போன்றவர்கள் கோருவார்கள் என்றால் அது பிரபாகரனுக்கு செய்யும் அவமதிப்பு.
பிரபாகரன் நாட்டை பிரிக்குமாறு கூறினாலும் தேசிய கீதத்தை பிரிக்குமாறு கூறவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.