அவுஸ்ரேலியா காட்டுத்தீ: 30,000இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, December 29, 2019

அவுஸ்ரேலியா காட்டுத்தீ: 30,000இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்!

அவுஸ்ரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, 30,000இற்க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.மெல்பேர்னின் கிழக்கு ஜிப்ஸ்லன்ட் (Gippsland) பகுதியில் இருந்தே இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியிலுள்ள சில முக்கிய வீதிகளும் காட்டுத் தீயால் மூடப்பட்டுள்ளன.

அத்தோடு, காட்டுத் தீயால் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் சுமார் 900 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 3.48 மில்லியன் ஹெக்டர் நிலம் கருகியது.

மேலும், விக்டோரியா மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இதேவேளை, அவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.