கோட்டாவுக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று மக்கள் எழுச்சிப் பேரணி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 22, 2019

கோட்டாவுக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று மக்கள் எழுச்சிப் பேரணி!

காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதுடன், குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்துச் சிந்திக்க முடியும் எனவும், அவர்களை மீளக்கொண்டு வரமுடியாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

 இவ்விடயம் தொடர்பில் சர்வதேசத்திடம் நீதி கோரியும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றிலில் நடைபெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களின் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணியில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.