மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பௌத்த குரு ஒருவர் மது போதையில் குழப்பம் விளைவித்ததையடுத்த, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (29) இரவு இந்த சம்பவம் நடந்தது.
கைது செய்யப்பட்ட பௌத்த குருவை கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதிதனைக்குட்படுத்தப்பட்டார். இதன்போது, அவர் அதிக மது போதையிலிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
கடந்த காலங்களில் சிவனொளிபாதமலை அடிவாரத்தில் பௌத்த பிக்குவாக இருந்ததாகவும், அதன் பின்னர் மாத்தளை பகுதிக்கு சென்றதாகவும், தற்போது வாழச்சேனை பகுதியில் உள்ள விகாரையில் உள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்திருந்தார். அந்த விகாரையை புனரமைக்கவுள்ளதாக தெரிவித்து நிதி திரட்டும் டிக்கட் புத்தகங்களும் அவர் வசம் இருந்தன.