ஜனாதிபதி அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, December 26, 2019

ஜனாதிபதி அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!


ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவோர் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசகர் எனக் கூறிக்கொண்டு மொரட்டுவையிலுள்ள பிரபல பாடசாலையின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் பற்றி அறியக்கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அவர் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ள நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவோர் தொடர்பாகத் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.