சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15ம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று (26) விசேட வழிபாடும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் குருமன்காடு சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இந்த பிரார்த்தனை இடம்பெற்றது.
சிவ குகநாதக்குருகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்கள் நினைவாக ஆத்மசாந்தி பூஜைகள் இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.