காணாமல் போனார் ராஜித? - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, December 26, 2019

காணாமல் போனார் ராஜித?

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித தலைமறைவாகியுள்ளார்.அவரை கைது செய்ய கோத்தா உத்தரவில் காவல்துறை அலைந்து திரிந்துவருகையில் அவர் தனது வதிவிடத்திலிருந்து காணாமல் போயுள்ளார்.இதனிடையே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய இன்று அவரது இல்லத்திற்கு சென்ற சிஐடி குழுவினர் வெறும் கையுடன் திரும்பினர்.

கொழும்பிலுள்ள ராஜிதவின் இல்லத்திற்கு 25 மதியம் 1.15 மணியளவில் சிஐடி குழுவினர் சென்றனர்.

சுமார் 20 நிமிடங்களின் பின்னர் ராஜித வீட்டில் இருந்து சிஐடி குழுவினர் வெளியேறிச் சென்றனர். எனினும், அவர்கள் அங்கு சென்றபோது, ராஜித வீட்டில் இருக்கவில்லையென தெரிய வருகிறது.

முன்னாள் அரசின் முக்கியஸ்தர்களை வரிசையாக கைது செய்யும் தற்போதைய அரசின் முயற்சிகளில் ஒன்றாக ராஜித கைது முயற்சியும் விமர்சிக்கப்படுகிறது.

நவம்பர் 10ம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வாகன தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில் ராஜித மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நேற்று அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டபோது, கொழும்பிலிருந்த தனது இல்லத்திலேயே ராஜித தங்கியிருந்தார். அதன் பின்னரேயே வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

இதேவேளை, நாளைய தினம் தனது சட்டத்தரணிகள் ஊடாக ராஜித நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என தெரிவிக்கப்படுகிறது. நாளை தினம் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தால், நாளையே கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.