சுனாமி ஆழிப்பேரலையின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) காலை நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது கொல்லப்பட்டவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்படி வடமராட்சி – உடுத்துறை நினைவாலயத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலலுத்தினர்.
இதன்போது தேசிய கொடியை கு.பிரபாகரமூர்த்தி ஏற்றினார். தொடர்ந்து உடுத்துறை சுனாமி நினைவு சதுக்கத்திற்கு அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்தனர்.
நினைவுச் சுடரினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏற்ற சமநேரத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு உறவுகளால் நினைவுசுடர் ஏற்றப்பட்டு சுனாமி கீதம் இசைக்கப்பட்டது.