இலங்கையில் உள்ள நல்லூர் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனமே தனது அடுத்த இலக்கு என்று சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நல்லை ஆதீனம் தமக்கும் நித்தியனந்தாவுக்கும் தொடர்பில்லை என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நல்லை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவிக்கையில்,
அவர் உண்மையில் அப்படி சொன்னாரா என்பதை ஆராய வேண்டும். அல்லது குழப்பங்களை ஏற்படுத்த இடையில் யாரும் ஏதாவது வேலைகளை செய்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும். எங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை. - என்றார்.